UAE அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படும் அவ்வடையாள அட்டையானது வளர்ந்தோரும் பிள்ளைகளும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது மிக அவசியம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டைகளை http://www.id.gov.ae/en/home.aspx என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்பிப்பதனூடாக பெற்றுக்கொள்ளலாம்.

முதற்தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவராக இருப்பின் ஐக்கிய இராச்சிய அடையாள அட்டை மத்திய நிலையத்திற்கு சென்று புகைப்படங்களையும் விரலடையாளத்தையும் வழங்க வேண்டும்.

அடையாள அட்டை பணிகள் பூர்த்தியடையும் பட்சத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவலொன்றினூடாக அறிவிக்கப்படும் 5 வருடத்திற்கு 100 டிராம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் மற்றும் அங்கு தங்கி வாழ்வோர் வீஸா காலத்திற்கமைய 100 டிராமும் தனியார் தொடர்பாடல் நிலையங்களினூடாக விண்ணப்பிப்பதற்கு அந்நிறுவனத்திற்கு தனியாக 70 டிராமும் செலுத்த வேண்டும்.

அத்தோடு அந்நாட்டில் வசிப்போருக்கு சட்டரீதியான கவுச்சீட்டு மற்றும் குடும்பப் புத்தகம் அவசியம். மத்தியகிழக்கு ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கத்துவம் பெற்ற நாட்டினருக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பதற்கான எழுத்து மூல அனுமதி அவசியம். 15 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு வர்ணப்புகைப்படம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டைப் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் வழங்கப்பட்ட தபால் நிலைய இலக்கத்திற்கு அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களை @EmiratesID_HELP https://twitter.com/EmiratesID_HELP என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435