ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டையில் தனிப்பட்ட சுகாதார தகவல்கள் உள்ளடக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் தானமாக வழங்க விரும்பும் உடல் பாகங்கள் தொடர்பிலும் அவ்வடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சட்ட அமைச்சின் வழிகாட்டலில் அடையாள அட்டை மற்றும் குடித்தொகை அதிகாரசபையின் ஒத்துழைப்பில் குறித்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைக்கு ‘ஸ்மார்ட் சுகாதார அட்டை’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
வலைக்குடா வலய வைத்தியர்களுக்கு தனிப்பட்ட சுகாதார தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் வகையில், குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அட்டை உரிமையாளரின் ஒவ்வாமை, குருதிவகை, நோய், நீண்டகால நோய்கள், தானமாக வழங்க விரும்பும் உடற்பாகங்கள் ஆகிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த அட்டையில் உள்ள தகவல்களை வைத்தியர்கள் வாசிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் தகவல் உள்ளடக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
உடற் பாகங்களை தானமாக விரும்புவதாக இதுவரை 55 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.