ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல் கைமா பொருளாதார வலயத்தில் அண்மையில், ராகேஸ் தொழில்துறை வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10,000 மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிகள் மற்றும் தளங்களுக்குள் தொழிலாளர் தங்குமிடங்களுக்குள் சோதனைகள் நடைபெற்றதாக கலீஜ் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தகுதிவாய்ந்த சுகாதார நிபுணர்களின் குழுவைக் கொண்டுவந்த MoHAP, மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சு, MoHRE உடன் இணைந்து இந்த தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ராகேஸ் தொழில்துறை வலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து இந்த சோதனைகளை மேற்கொள்வதில் நாங்கள் MoHAP மற்றும் MoHRE உடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறோம். மேலும் 2020 மே மாதத்திற்குள் 20,000 சோதனைகளை மேற்கொள்ளவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று RAKEZ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமி ஜலாட் தெரிவித்துள்ளார்.