ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கே கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தனிமைப்படுத்தப்பட்ட 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுத உறுதியானவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது.
2,035குணமடைந்துள்ள நிலையில், 669 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.