கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கத்தாரில் சிக்கியிருந்த 349 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாபில் சிக்கியிருந்த 335 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே-648 ரக விமானத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேநேரம், கத்தார் – டோஹாவில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள், கத்தார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர்-668 ரக விமானத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி. தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பதற்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.