ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெப்பநிலை தற்போது 64 செல்சியஸாக காணப்படுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் தூசு மறைப்பின் காரணமாக 58 செல்சியஸ் வெப்பநிலை உணரப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம், அந்நாட்டின் தெற்கு பகுதியான சாஃபார், அஸீர் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பாகங்களிலும் இந்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி வரையில் நிலவும் என்று வானிலை அவதான நிலைய பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
டுபாய் வீதியில் ஒருவர் நேற்று (26) நேரடி சூரிய ஒளியில் முட்டை பொரித்தமை குறிப்பிடத்தக்கது.