தொழிற்சங்கங்களின் அவசியம் ஏன்? எதற்காக?

தொழிற்சங்கங்கள்

ஒரு ஒன்றியத்தில் இணைவதற்கான சுதந்திரம்

யாப்பானது சேர்ந்தியங்குவதற்கான சுதந்திரத்தை வழங்குவதுடன் பணியாளர் தொழில் சங்கங்களை உருவாக்கவும் அனுமதியளிக்கின்றது.

தொழிற்சங்க சட்டமானது பின்வரும் நோக்கங்கள் ஒன்றுக்காகவோ அல்லது பலவற்றுக்காகவோ நிரந்தரமான மற்றும் தற்காலிக பணியாளர்கள் இணைந்திருக்கும் அமைப்பென வரையறை செய்கின்றது.

அ. பணியாளருக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையிலாக உறவுகள் அல்லது பணியாளருக்கிடையிலான உறவுகள் அல்லது தொழில் வழங்குனர்களுக்கிடையிலான உறவுகள்  அல்லது

ஆ. எந்த தொழிற்துறை அல்லது வியாபாரம் மீதான கட்டுப்பாடுகளை போடுதல் அல்லது

இ. தொழில் பிணக்கில் பணியாளரை அல்லது தொழில் தருநரை பிரதிநிதித்துவம் செய்தல் அல்லது

ஈ. தொழில்துறையொன்றில் வேலை நிறுத்தம் அல்லது தொழில் மறியலுக்கு நிதியேற்பாடு செய்தல் அல்லது வேலைநிறுத்தம் அல்லது தொழில் மறியலின் போது அங்கத்தவர்களுக்கு பணம் வழங்குதல் அல்லது பிற நன்மைகளை வழங்குதல். அத்துடன் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தையூம் உள்ளடக்கும்.

ஒரு தொழிற்சங்கமானது அது இயங்கத்தொடங்கி 3 மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படவேண்டும். பதிவு செய்வதற்கு 6 மாதங்கள் வரை நீடிப்பு வழங்கப்படலாம். குறைந்தபட்சம் 7 பேர்கள் ஒப்பமிட்ட அனுமதிபடிவமானது தொழிற்சங்கத்தின் விதிகள் மற்றும் பின்வரும் கூற்றுக்களுடன் பதிவாளருக்கு கையளிக்கப்படவேண்டும்.

படிவத்தை நிரப்புபவர்களின் பெயர் தொழில் மற்றும் முகவரி. தொழிற்சங்கத்தின் பெயர் அதன் தலைமை செயலகத்தின் முகவரி. செயற்குழுவின் பதவிநிலைகள் அங்கம் வகிப்போரின் பெயர் வயது முகவரி மற்றும் தொழில்.

எந்தவொரு ஏற்பாடுகளுடனும் தொழிற்சங்கத்தின் நோக்கங்கள் விதிகள் யாப்பு முரண்பாடாவிடின் பதிவாளர் சங்கத்துக்கான பதிவு சான்றிதழை வழங்குவார். இந்த தேவைப்பாடுகளுக்கு இணங்காத போது சங்கத்துக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படமுடியூம்.

ஒரு வேலை வாய்ப்பு நிபந்தனையாக ஒரு ஊழியரை ஒரு சங்கத்தில் சேரவோ அல்லது சேராதிருக்கவோ ஒரு தொழில் வழங்குனர் அழுத்தம் தருவாறானால் அவ்வகையான செயற்பாடு நியாயமற்ற தொழில் சார் நடவடிக்கையென தொழில் பிணக்கு சட்டம் கருதுகின்றது. அதேபோல் ஒரு ஊழியர் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஒரு தொழில்வழங்குனர் பாரபட்சம் காட்ட முடியாது. 21 மேற்பட்ட 16 உட்பட்ட ஒருவர் தொழிற்சங்க உறுப்பினராக முடியூம்.

இலங்கையில் 2074 பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. அதில் 54.5 வீதமானவை பொதுசேவையிலும் 27.5 வீதமானவை பொது கூட்டுத்தாபனங்களிலும் 18 வீதமானவை தனியார்துறையிலும் இயங்குகின்றன. இலங்கையின் மொத்த ஊழியர்படையின் 9.5 வீதத்தினர் தொழிற்சங்க அங்கத்தினராக உள்ளனர். குளோபல் யூனியன் பெடரேசனுடன் பல சங்கங்கள் இணைந்துள்ளன. நான்கு சங்கங்கள் இன்ரநசனல் கொன்பெடரேசக் யூனியனுடன் இணைந்துள்ளன. இலங்கை தொழிலாளர் கொஸ்கிரஸ் இலங்கை நிதகஸ் சேவக சங்கமய நசனல் டிரேட் யூனியன் பெடரேசன் நசனல் வேக்கேஸ் கொஸ்கிரஸ் என்பவயே அவையாகும். தொடர்புகள் வருமாறு.

1. இலங்கை தொழிலாளர் கொஸ்கிரஸ், 72 ஆனந்த குமாரசாமி மாவத்தை கொழும்பு 7

தொலை: 94 011-2574528, 011-2574524, E-mail: [email protected]

2. நசனல் டிரேட் யூனியன் பெடரேசன், 60 பண்டரநாயமயகுர

சிறீ ஐயவர்த்தனபுர மாவத்தை ராஐகிரிய இலங்கை

கூட்டுபேரம்பேசலுக்கான சுதந்திரம்

கைத்தொழில் பிணக்குகள் சட்டமானது கூட்டப் பேரம்பேசலை வழங்குகிறது. எவ்வாறாயினும் ஆகக் குறைந்தது 40 வீதத்தை தொழில்சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவைப்பாடானது மிகவும் வரையறையானதாக ஒரு வேலையிடத்தில் காணப்படுகிறது.

பிணக்கு சட்டமானது கூட்டு ஒப்பந்தங்களை கைத்தொழிலிலும் வேலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு நிபந்தனைகள் தொடர்புடைய ஒரு ஒப்பந்தமாக வரைவிலக்கணம் செய்கிறது. கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது வழமையாக சட்டத்தில் வழங்கப்பட்டதைக் காட்டிலும் தொழிலாளர்களுக்கு சிறந்த நன்மைகளை வழமையாக வழங்குகிறது.  கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது சட்டத்தில் வழங்கப்பட்டதைக் காட்டிலும் குறைந்த சார்புடைய ஏற்பாடுகளைக் கொண்டிருப்பின் அதனை அமுல்படுத்த முடியாது.

கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது அது பிரசுரிக்கப்படும் திகதியில் இருந்து வலுவுள்ளதாக இருக்கும். அது தரப்புக்களையும் தொழில்சங்கங்களையும் வேலைவழங்குனர்களையும் ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்ட தொழிலாளர்களையும் கட்டிப்போடுகிறது.

கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது காலப்பகுதியை வரையறுப்பதிலோ மீள வரையறுப்பதிலோ முடிவடைய முடியும். குறிக்கப்படாத காலப்பகுதியைக் கொண்ட  கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது ஆணையாளர் தொழிற்சங்கம். ஏனைய தரப்புக்கள் மற்றும்மற்றும் வேலைவழங்குனர் போன்றோருக்கு அனுப்பப்படும் குறித்துரைக்கப்பட்ட படிவத்தின் எழுதப்பட்ட இரத்துச் செய்தல் அறிவித்தல் கொடுக்கப்படுவதினால் ஒரு காலம் குறிக்கப்படாத கூட்டுப்பேரம்பேசல் ஒப்பந்தமானது இரத்துச் செய்யப்படக்கூடியது.

ஒரு கூட்டுப் பேரம்பேசல் ஒப்பந்தமானது எழுத்தில் இருக்க வேண்டும் என்பதுடன் உரிய தரப்புக்கள் இரண்டாலுமோ அல்லது பிரதிநிதிகளாலோ கைச்சாத்திடப்பட வேண்டும்.

மூலம்: கைத்தொழில் பிணக்குகள் 1950 ஆம் ஆண்டு சட்டத்தின் 5 -10 32A பிரிவுகள்

வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை

சட்டமானது வெளிப்படையாக வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை அங்கீகரிக்கவில்லை. எவ்வாறாயினும் தொழில்சங்க கட்டளைகள் சட்டமானது வேலை நிறுத்தத்துடன் சம்பந்தப்பட்ட வரைவிலக்கணம் செய்வதுடன் அத்தியவசிய சேவைகள் மீதான வேலைநிறுத்தத்தை தடைசெய்கிறது. (அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த தொழில் முயற்சிகளில் வேலைநிறுத்த நடவடிக்கையானது சட்டரீதியானது என்பதுடன் வேலை வழங்குனருக்கு குறித்துரைக்கப்பட்ட முறையிலும் வடிவத்திலும் வேலை நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 21 நாட்கள் முன்பதாக அறிவிக்கப்படின் சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது. மத்தியஸ்த உதவி நாடுவதற்கான கட்டாயம் மற்றும் அத்தியவசிய சேவைகள் என அழைக்கப்படும் நீண்ட நிரல் என்பன வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையை வரையறுக்கின்றன.

தொழிற்சங்க கட்டளைச்சட்டம் மற்றும் கைத்தொழில் பிணக்கு சட்டம் என்பன வேலைநிறுத்தத்தை ஏதும் ஒரு கைத்தொழில் வர்த்தகத்தில் ஒன்றாக செயற்படும் வேலைக்கு அமர்த்தப்பட்ட அமைப்பால் வேலையை நிறுத்துவதாகவும் அல்லது ஏதும் ஒரு எண்ணிக்கையுடைய ஆட்கள் ஒரு புரிந்துணர்வின் கீழ் ஒன்றை மறுப்பதாகவும் வரைவிலக்கணம் செய்கிறது.

கைத்தொழில் பிணக்கானது, வேலைவழங்குனர் மற்றும் பணியாளர்கள் அல்லது வேலையாட்களுக்கிடையில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பாகவோ அல்லது வேலைவாய்ப்பு நிபந்தனைகள் தொடர்பாகவோ அல்லது எந்த ஒரு ஆளின் வேலையின் நிலைமைகள் தொடர்பானதாகவோ என்பவற்றுக்கிடையிலான பிணக்காகவோ இருக்க முடியும்.

மூலம்: 1950 ஆம் ஆண்டு கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 32 மற்றும் 42 பிரிவு தொழிற்சாலைகள் சட்டத்தின் 67 ஆம் பிரிவு 1935 ஆம் ஆண்டு தொழிற்சங்க கட்டளைச்சட்டம்.

வழிமூலம்: salary.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435