மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகரில் நேற்று (04) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் , தற்போது அங்கு இரு வார கால அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதலின் பின்னர் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் லெபனான் ஜனாதிபதி மைக்கல் ஆன்.
இவ்வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து துறைமுக ஊழியர்களும் விசாரணைக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வைக்கப்பட்டள்ள அமோனியம் நைட்ரேட்டை அகற்றுமாறு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அதனை செயற்படுத்த தவறி விட்டனர் என சுங்க தலைமை அதிகாரி பாட்ரி தாஹிர் உள்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
லெபனானில் மூன்று நாட்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – பிபிஸி/ வேலைத்தளம்