
அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அதிகாரசபையின் வாசிப்பு 2016 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
முதலாம் மற்றும் மூன்றாம் முனையம் இணையும் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நூலகத்தில் பல மொழி புத்தகங்கள் வாசிப்பதற்காக வைக்கப்படடுள்ளன.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் திட்டத்தில் பங்களிப்பு செய்யும் வகையில் அபுதாபி விமான நிலையம் ஆரம்பித்துள்ள இந்நூலகத்தில் பயணிகள் அறிவையும் கல்வியையும் பகிர்ந்து கொள்ள பயன்படுத்துவர் என்று விமான நிலையத் தலைவர் அலி அல் மன்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்நூலகமானது விமானம் வரும் வரை காத்திருக்கும் விமானிகள் தமது நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஏதுவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்/The National UAE