புனித றமழான் மாதத்தில் சில மத குருமார்கள் மற்றும் சில நாட்டுக்கு வீசா வழங்குவதில்லை என குவைத் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. றமழான் காலத்தில் பல மத குருமார்கள் நாட்டில் போதனைகளை , கலந்துரையாடல்கள் நடத்துவார்கள். எனவே இவ்வாறானவர்களுக்கு வீசா வழங்க முதல் நன்கு ஆராய்ந்து பார்த்தே வழங்கப்படும் என்று என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சிரியா, ஜோர்தான், யேமன், ஈராக் ஆகிய நாடுகளுக்கு வீசா வழங்குவிதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உபவாசக் காலத்தில் பண உதவி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளிவாயில்களுக்கருகில் நோன்பு நோற்றல், கொட்டில்கள் கட்டுதல் என்பனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. றமழான் மாதத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்