ஓமானில் பணியாற்றும் இலங்கையர் ஓமானுக்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொள்வதற்கு கட்டணமற்ற தொலைபேசி தொடர்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
தாம் பணியாற்றும் இடங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தூதரகத்தில் முறைப்பாடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த தொலைபேசி வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓமானில் பணியாற்றும் இலங்கையர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் 80007877 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்று என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.