மதிய நேர இடைவேளை மீறல் முறைப்பாடுகள் ஐந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய மனித வளங்கள் மற்றும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நன்பகல் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரையான மதிய நேர இடைவேளை மீறல் தொடர்பில் தமக்கு 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 5 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித வளங்கள் அமைச்சு தனது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தகவல் வௌியிட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூன் 15 தொடக்கம் செப்டெம்பர் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் இம்முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. திறந்த வௌிகளில் நேரடி சூரிய ஔியின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்காக 3 மாத காலத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் மதிய நேர இடைவேளை வழங்கியுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட இடைவேளையை தொழில்வழங்குநர்கள் மீறும் வகையில் செயற்படுவது தொடர்பில் இம்முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.