சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நேற்று இரவு (22) அந்நாட்டு நேரப்படி 10.27 ரிச்டர் அளவுகோளில் 3.9 அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஈரானிற்கும் தாக்கியுள்ளது.
இதுவரையில் சேதவிபரங்கள் வௌியிடப்படவில்லை. இந்நில அதிர்வால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தேசிய நிலஅதிர்வு வலையமைப்பு தெரிவித்துள்ளது.