அமெரிக்காவுக்கு தாதிகளை அனுப்ப ஒப்பந்தம்

ஐக்கிய அமெரிக்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக தாதிகளை இணைத்துக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 4ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டுப் பணியாளர் முகவர் நிலையமான ‘கர்ம’ சேவை நிலையத்திற்கும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பணியகம் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.ஒபேசேக்கரவும் முகவர் நிலையம் சார்பில் அதன் நிறைவேற்று அதிகாரி ஐசேக் உலாடில் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

ஐந்து வருடத்திற்கு செல்லுபடியாகும் மேற்படி ஒப்பந்தமானது 30,000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தரவுள்ளதுடன் இவ்வொப்பந்தத்தினூடாக அனுப்பப்படும் பணியாளர்கள் 3 வருட ஒப்பந்தத்துடன் அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வொப்பந்த கைச்சாத்திடலின் போது வௌிநாட்டு ​வேலைவாய்ப்பு பணியகத்தின் பணியாளர் சட்டத்தரணி உபுல் தேசப்பிரிய, மேலதிக நிர்வாக அதிகாரி டப்ளியு.எம்.வீ. வனசேக்கர, நிறுவன பிரதிநிதி காமின குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435