ஐக்கிய அமெரிக்க மருத்துவமனைகளுக்கு இலங்கை தாதிகளை சேர்த்துக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் 4ஆம் திகதி கையெழுத்திட்டமை குறித்து வேலைத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. அப்பணியில் இணைத்துக்கொள்வது என்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஐந்து வருட ஒப்பந்த காலத்தை கொண்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தினூடாக 0,000 இற்கும் மேற்பட்ட தாதியர் வேலைவாய்ப்புக்கான 3 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கவில் பதிவு பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையமான ‘கர்மா’ நிறுவனமானது இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. முதற்கட்ட தாதியர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக விண்ணப்பிக்கலாம். சேவைக்கால ஒப்பந்தம் 3 வருடங்களாகும்.
இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தில் தாதியர் பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.
5 வருட அனுபவம் அவசியம்.
IELTS இல் அமெரிக்காவுக்கு அவசியமான புள்ளியை பெற்றிருத்தல்.
மேற்கூறப்பட்ட தகையுள்ளவர்கள் ”மேலதிக பொது முகாமையாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு”, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இல.234, டென்சில் கொப்பேகடுவ மாவத்த, பத்தரமுல்ல. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
வேலைத்தளம்