இருக்கை பட்டி விபத்துக்களை குறைக்கும், அறிவீர்களா?

இருக்கை பட்டியணியாதிருத்தல் மற்றும் முன் இருக்கையில் குழந்தையை அமர்த்திக்கொண்டு பயணம் செய்வோருக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 4 கருப்புப் புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா மற்றும் புஜைரா பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களினூடாக இவ்விடயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர் பொலிஸார்.

நாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரு வருடங்களில் இரு போக்குவரத்து விதி மீறல்கள் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளன. எனினும் பெரும்பாலான மோட்டார் வாகன சாரதிகள் இருக்கை பட்டியணியும் சட்டத்தை மீறி வருவது அவதானிக்கப்படுகிறது. பல சாரதிகள் குழந்தைகளை முன்னிருக்கையில் உட்கார வைத்து அழைத்து செல்வதும் கமராக்களில் பதவாகியுள்ளன.

இவ்விதி மீறலை பூச்சியமாக குறைப்பதே சார்ஜா பொலிஸாரின் நோக்கமாகும். அதற்காக ‘உங்கள் பட்டி, உங்கள் பாதுகாப்பு” (Your Belt, Your Safety) என்ற பிரசார நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்கின்றனர். இப்பிரசார நடவடிக்கையினூடாக பல மொழிகளிளான துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பாக இருக்கைப் பட்டியினை சரியாக பூட்டுவது, முன்னிருக்கையில் குழந்தைகளை அமர்த்தாமலிருப்பது என்பன குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைஅ இந்தியா உட்பட பல நாட்டவர்கள் ஐக்கிய அரபு இராச்சியங்களில் பணியாற்றுகின்றனர். தமது குடும்பங்களுடன் அந்நாட்டில் வசிக்கின்றனர். எனவே இவ்விடயம் குறித்து அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435