இஸ்ரேல் பராமரிப்பு பணியாளருக்கு வீஸா புதுப்பிக்க அனுமதி

இஸ்ரேலில் பராமரிப்பு சேவையில் ஈடுபடும் சேவையாளர்கள் தமது வீஸா காலாவதியான பின்னர் மீண்டும் புதிப்பித்து தொடர்ந்து பணியாற்றுவதற்கு  அனுமதி வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீண்டகால பேச்சுவார்த்தையின் பின்னர் இஸ்ரேல் உள்நாட்டு விவகார அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் வீஸா காலம் முடிந்தவுடன் அல்லது பராமரித்த முதியவர் இறந்த பின்னர் பராமரிப்பில் சேவையில் இருந்தவர்கள் தொழில்வாய்பபை இழந்து நாடு திரும்பவேண்டியிருந்தது. சிலர் சட்டவிரோதமாகவும் பணியாற்றினர்.

இதனை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீண்டகால பேச்சுவார்த்தையையடுத்து இஸ்ரேல் உள்விவகார அமைச்சு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

தமது வீஸாவை புதிப்பித்துக்கொள்ள இதுவரை 1500 பேர் விண்ணப்பத்துள்ளனர் என்றும் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் பராமரிப்பு சேவையாளராக பணியாற்றும் பலருக்கு இது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435