ஐக்கிய அரபு இராச்சிய ஊழியருக்கு மதிய ஓய்வு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்தியான நேர ஓய்வு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நன்பகல் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரையில் வழங்கப்படும் இவ்வோய்வானது நேற்று (15) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வந்ததுள்ளதுடன் இக்காலப்பகுதியில் நேரடியாக சூரிய ஒளியில் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விசேட சட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சட்டம் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்று அவதானிக்க அந்நாட்டு அமைச்சினால் 18 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அபுதாபியில் 3 குழுக்களும் டுபாயில் 4 குழுக்களும் பணியிடங்களில் திடீர் சோதனை நடத்தவுள்ளன.

அந்நாட்டு அரச பொதுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான கொள்கையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்விசேட சட்டமானது, நாளொன்றின் 8 மணி நேர வேலையை இரு கட்டங்களாக பிரித்து செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வெட்டு மணி நேரத்தையும் விட அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படின் அதற்கான மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு தொழில் சட்டம் தெரிவிக்கிறது.

இச்சட்டத்தை மீறும் தொழில் வழங்குநர் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு 5000 டிராம் அபராதம் செலுத்த வேண்டும். அதிக பணியாளர் பாதிக்கப்பட்டிருப்பின் 50, 000 டிராம் அபராதம் செலுத்த வேண்டும்.

இதையும் மீறி அவசியம் வெளியில் நேரடி சூரிய ஒளியில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படின் தொடர்ச்சியாக உப்பு மற்றும் லெமன் சாறு, குளிர்ந்த நீர் வழங்குவதுடன் ஓய்வுக்கான தற்காலிக கூடராமும் வழங்க வேண்டும். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள், நேரடி சூரிய ஒளியில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த உங்கள் தொழில் வழங்குனருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435