ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகக்கூடிய சுற்றுலா வீஸா விரைவில் அறிமுகப்படவுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்புதிய வீஸாவை வைத்திருப்பவர்கள் 6 மாதங்களுக்கு இருப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர் என்று கல்ப் நியுஸ் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
ஏனைய வீஸாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சட்டதிட்டங்களே இப்புதிய 5 வருட வீஸாவுக்கும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.