கடற்கரையில் பொழுதை கழிக்க செல்பவர்கள் புகைப்படங்கள், காணொளிகளை என்பவற்றை எடுக்கும் போது ஏனையோரின் தனியுரிமை பாதிக்கப்படாதவாறு செயற்படுமாறு டுபாய் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பிறருக்கு தெரியாமல் அவர்களுடைய தனியுரிமை பாதிக்கப்படும் வகையில் புகைப்படம், காணொளி எடுப்பது சட்டப்படி குற்றம் என டுபாய் பொலிஸார் அவர்களுடைய உத்தியோகப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை தகவல் வௌியிட்டுள்ளனர்.
குறிப்பாக வார இறுதிநாட்களில் உள்ள ஒய்வு நேரத்தில் பெறும்பாலானவர்கள் கடற்கரையில் பொழுதை கழிக்க செல்வது வழமை என்பதால் அத்தருணங்களில் புகைப்படம், காணொளிகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பொதுவிடங்களில் புகைப்படங்களும் காணொளிகள் எடுப்பது தொடர்பில் விதிமுறைகள் டுபாயில் உள்ள போதிலும், கடற்கரைகளில் நீச்சல் உடைகளில் இருப்பார்கள் என்பதால் அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் மட்டும் டுபாய் கடற்கரைகளில் நீச்சல் உடையில் இருந்த சுமார் 290 பெண்களுடைய புகைப்படங்கள் அவர்களுக்கு தெரியாமல் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.