கறுப்பின அடிமை பெண்ணின் உருவம் அமெரிக்க டொலரில்

அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக கறுப்பின அடிமை பெண்ணின் உருவம் அமெரிக்க டொலரில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 டொலர் நோட்டிலேயே இவ்வுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

1820ஆம் ஆண்டில் பிறந்த கறுப்பின அடிமைப் பெண்ணான ஹெரியட் டும்மன் என்பவரின் உருவமே அமெரிக்க டொலர் நோட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

அடிமைகள் உரிமையாளரான முன்னாள் ஜனாதிபதி என்ட்ரூ ஜெக்சனின் உருவம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹெரியட் டும்மனின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. எஜமானர்களின் பல்வேறு கொடுமைகளுக்காலான அடிமைகள் தப்பிச் செல்வதற்கு உதவியவராக ஹெரியட் தொடர்பில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்க ரயில் பாதையினூடாக அடிமைகளை தப்பிச் செல்வதற்கு அவர் செய்த உதவிகள் தொடர்பில் இன்றும் பேசப்படும் ஒரு விடயமாகும்.

அடிமைகளை மீட்க உதவியது மட்டுமன்றி தனது நாட்டில் ஜனநாயத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியமையையும் கௌரவப்படுத்தும் வகையிலேலே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் திரைசேரி செயலாளர் ஜேகப் லெவ் ஹெரியட்டின் உருவப் படத்தை அமெரிக்க டொலிரில் பொறிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குழந்தைகளுடன் தப்பியோடிய அடிமைகள் பன்றிகளுடனும் கோழிகளுடனும் படகில் ஏற்றி அனுப்பிய காட்சியை பின்னாளில் நினைவு கூர்ந்த ஹெரியட் இனி அவ்வாறான காட்சியை காணக்கிடைக்க கூடாது என்று தான் பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.

அமெரிக்க சிவில் யுத்தத்தின் போதும் ஹெரியட் ஆற்றிய பணிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435