குவைத்தில் நான்கு வருட சம்பளத்தை பெறும் இலங்கைப் பெண்

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவருக்கு, அவரது தொழில் தருநரான குவைத் நாட்டைச் சேர்ந்த பெண் 4 வருட சம்பளப் பணமான 16 இலட்சம் ரூபாவை (3, 300 குவைட் டினார்) வழங்க இணங்கியுள்ளதாக குவைத் ஊடகம் செய்து வௌியிட்டுள்ளது

குவைத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்து தொழில் தறுநர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

அத்துடன், இலங்கை பணிபர் பெண்ணைத் தாக்கியமை மற்றும் எதிர்காலத்தில் வெளிநாட்டில் பணிபுரிய முடியாதவாறு தடை ஏற்படுத்துவதாக கூறியமை என்பன தொடர்பிலும் குவைத் அதிகாரிகள் குறித்து தொழில் தறுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கை பணிப் பெண்ணுக்கு, அவரது தொழில் தறுநரான பெண், கடந்த நான்கு ஆண்டுகளாக சம்பளப் பணத்தை சேமித்து வைப்பதாக குறிப்பிட்டு, அதை வழங்காமல் தம்மகத்தே வைத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இலங்கை பணிப்பெண், அங்குள்ள தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதுடன், தமக்கு நடந்தவை குறித்து தூதரகத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

இதையடுத்து, தூதரக அதிகரரிகள் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே குறித்த தொழில் தறுநரான பெண், இலங்கை பணிப் பெண்ணுக்கு சம்பளப் பணத்தை வழங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், இலங்கைக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தன் காரணமாகவே, அவருடைய தொழில் தறுநர் சம்பளம் பணத்தை வழங்க மறுத்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435