சுற்றுலா வீசாவில் சென்றால் ஓமானில் வேலைவாய்ப்பில்லை

சுற்றுலா வீசாவை பயன்படுத்து பணிக்காக செல்வோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஓமான் அரசு அறிவித்துள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஓமான் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள ஓமான் மனித வள அமைச்சர் செயிக் அப்துல்லா அல் பக்ரீயை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விசேட காரணங்களுக்காக வீசா வழங்குவதாயினும் இலங்கை தூதரக அனுமதியுடையே வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடு செல்லும் பெண்களில் குடும்பப் பின்னணியை ஆராயமல், பணியகத்தில் பதிவு செய்யாமல் சில முகவர்கள் சட்டவிரோதமாக பணிப்பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகின்றனர். இதனால் அந்நாட்டு அரசு இத்தீர்மானத்தை எட்டியுள்ளது என்று அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435