டுபாயில் வேலைவாய்ப்புக்கள் 24 வீதத்தால் அதிகரிப்பு

டுபாயில் வேலைவாய்ப்பு 24 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தித்தளமான எமிரேட்ஸ் 24/7 செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சுகாதாரத்துறை சார் வேலைவாய்ப்புக்களே அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு மார்ச் மாதம் சுகாதாரம் தொடர்பான வேலைவாய்ப்புக்களை 38 வீதமாக அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் டுபாய் சுகாதாரத்துறையை அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தரமானதாகவும் திறன் மிக்கதாகவும் மாற்றியமைப்பதற்கான நோக்கை நடைமுறைப்படுத்துவதற்காகவே இத்துறையில் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சில்லறை வர்த்தக மற்றும் தளவாட விற்பனைத் துறையில் 36 வீதமான வேலைவாய்ப்புக்களும் நுகர்வோர் துறையில் உணவு மற்றும் பொதியிடப்பட்ட உணவு, சந்தைப்படுத்தல் ஆய்வு, பொது உறவுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை உற்பத்தி, தோற்பொருள் உற்பத்தி, மாணிக்கல் ,ஆபரணத்துறை, ஆகிய துறைகளில் 32 வீதமான வேலை வாய்ப்புக்கள் காணப்படுகி்ன்றன.

ஒட்டுமொத்தமாக ஒன்லைன் ஊடாக பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையும் 24 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435