குவைத்தில் பகுதி நேர பணியில் ஈடுபடுவோருக்கு முறையான சம்பளத்தை நிர்ணயிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்நாட்டில் பகுதி நேர பணியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்தே குவைத் அரச மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.
பொதுவாக முழுநேர வீட்டு பணிப்பெண்களே குவைத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர். ஆளணி நிறுவனங்களினூடாக குறித்த பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். இது தவிர பகுதி நேர வேலையாட்களின் எண்ணிக்கையும் கேள்வியும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதுடன் பகுதி நேர சேவையை வழங்குவதற்கு முகவர் நிலையங்கள் அதிக பணத்தையும் அறவிடுகின்றன.
இதனையடுத்து இந்தியா, எத்தியோப்பியா போன்ற நாட்டு வீட்டுப்பணிப்பெண்களுக்கு 180 குவைத் டினாரும் இலங்கை பணிப்பெண்களுக்கு 200 குவைத் டினாரும் மாதச் சம்பளமாக வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இடத்திற்கு இடம் சம்பளத் தொலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
சமைத்தல், பிள்ளை பராமரிப்பு, சாரதி போன்றவற்றுக்கே பகுதி நேர பணியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஆனால் குவைத் சட்டத்திற்கமைய பகுதி நேர வேலையில் ஈடுபடுவது சட்ட விரோத செயலாகும். எனவேதான் அந்நாட்டு அரசு சம்பளத் தொகையை நிர்ணயித்துள்ளது.
இவ்வாறான சட்டத்தை உருவாக்கிய முதலாவது மத்தியக்கிழக்கு நாடு குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்