புகைத்தல்- மது பாவனைக்கு குவைத்தில் கடுமையான தண்டனை

குவைத் சட்டத்தின் 260 ஆவது சரத்திற்கமைய தனியார் இடத்திலேனும் புகைப்பிடித்து அகப்படும் நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை அல்லது 2000 டினார் அபராதம் அல்லது இவ்விரண்டும் வழங்கப்படும்.

மேற்குலக நாடுகள் அளவுக்கு சுதந்திரம் மத்திய கிழக்கு நாடுகள் வழங்காவிட்டாலும் கூட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் குவைத்தில் ஓரவுக்கு சுதந்திரம் காணப்படுகிறது. எனினும் புகைத்தல், மதுபானம் பயன்படுத்தல், போதை பொருள் பாவனை என்பவற்றிற்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேறு நபருக்கு மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றை பயன்படுத்த உதவி செய்பவருக்கு அந்நாட்டு சட்டத்திற்கமைய 7 வருட சிறைத்தண்டனை அல்லது 7000 டினார் அபராதம் அல்லது இவ்விரண்டு தண்டனைகளையும் வழங்கப்படும்.

இதனூடாக புகைத்தல் மற்றும் மதுபாவனையினால் அகப்படுபவருக்கு வழங்கப்படும் தண்டனையை விடவும் பிறருக்கு அதற்காக உதவுவருக்கான தண்டனை அதிகம் என்பது தெளிவாகிறது.

புலம்பெயர்ந்து தொழில் புரியும் ஒவ்வொருவரும் இது தொடர்பில் தெளிவு பெற்றிருப்பது தேவையற்ற சட்ட பிரச்சினைகளிருந்த உங்களை பாதுகாக்கும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435