போதை மருந்து கடத்தியவர் கைது

இனிப்புப் பொருட்களுக்கிடையில் அடையாளப்படுத்தப்படாத போதை மருந்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருடைய பொருட்களை ஸ்கேன் செய்யும் வித்தியாசமாக நடந்துகொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட சந்தேகத்தினால் குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என்றும் RAK சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என RAK சர்வதேச விமான நிலைய சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் மொஹம்மட் அல் மிஹிரிஸி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாறு போதை மருந்தை கடந்த முயன்ற நபரொருவர் RAK விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த நபரின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிறைத்தண்டனையுடன் சுமார் 50,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரகள் சுட்டிக்காட்டினர்.

விடுமுறைகளுக்கு நாடு திரும்பி குடும்பங்களுடன் சந்தோசமாக கழித்து விட்டு மீண்டும் தொழிலுக்காக செல்லும் எமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் பணியாற்றும் நண்பர்களுடைய குடும்பங்கள் வழங்கும் பொருட்களையும் தம்மோடு கொண்டு செல்கின்றனர். நாம் நமது நண்பர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மீது நம்பிக்கை வைத்தாலும் நம்பிக்கை துரோகம் செய்பவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை. எனவே தமக்கு வழங்கும் பொருட்கள் குறித்த கவனமாக இருக்கவேண்டியது ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435