இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமொன்றினூடாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக வேலைக்கு சென்று பல்வேறு சித்திரவதைக்குள்ளான 110 பெண்கள் நேற்று (09) காலை 5.30 மணிக்கு மீண்டும் நாடு திரும்பினர்.
சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் பணிக்காக சென்ற பெண்களே இவ்வாறு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை வந்தடைந்தனர்.
இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைக்காக சென்ற இப்பெண்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினூடாக மீண்டும் இலங்கை திரும்பியுள்ள இப்பெண்களில் பெரும்பாலானவர்கள் மாத்தளை, புத்தளம், குருணாகலை, அநுராதபுரம், காலி மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் விபத்துக்குள்ளானதில் ஒரு காலை இழந்த பெண்ணும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்