
கட்டாரில் மனிதவள நிறுவனங்களை (manpower agencies) தரப்படுத்தும் நடவடிக்கைக்காக அந்நாட்டு நிர்வாக அதிகாரசபை குழுவொன்றை நியமித்துள்ளது.
இதனூடாக மனித வள நடவடிக்கையை விரைவுபடுத்துவதும் அதற்கான செலவை குறைப்பதுமே இதன் நோக்கமாகும்.
தொழிலாளர் மற்றும் சமூக தொடர்பாடல் அமைச்சர் உட்பட புலம் பெயர் நடவடிக்கை தொடர்பில் பொறுப்பாக செயற்படும் அதிகாரிகள் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் பணியாளர்களை பணிக்கமர்த்துவதற்கு தொழில் வழங்குநர்கள் பெருமளவு நிதியை செலவழிக்க வேண்டியிருந்தது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அந்நாட்டு அரச இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனூடாக புலம்பெயர் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் அழுத்தங்கள் குறைவடைவதுடன் சட்ட விரோதமாக சேவைக்கு அமர்த்துதலை நிறுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பனவும் உறுதிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்