வட்ஸப்பை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம்- UAE சட்டம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வட்ஸப் சமூக வலைத்தளத்தினூடாக அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறீகளா? உங்கள் நண்பர், உடன் பணியாற்றுபவர் உங்களை பழிதீர்க்க வட்ஸப்பை பயன்படுத்துகின்றனரா? அதற்கு தீர்வு என்ன? சட்ட உதவியை நாட முடியுமா? இப்படி பல கேள்விகள் புலம்பெயர்ந்து தொழில்புரியும் பலருக்கு உள்ளது. அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்குவதற்கே இக்கட்டுரை.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் அவமானப்படுத்தப்படுவது குற்றமென உங்களுக்குத் தெரியுமா? ஆம் அது சட்டப்படி குற்றம்தான். கூட்டாட்சி சட்ட எண் 374 வது பிரிவு. ஐக்கிய அரபு அமீரகத்தின் தண்டனைச் சட்டம் (ஐக்கிய அரபு அமீரக தண்டனைச் சட்டம்) வழங்குவதில் 1987 ஆம் ஆண்டின் 3ம் இலக்கத்திற்கு அமைய தொலைபேசி அல்லது மூன்றாம் நபருக்கு எதிரில் அவமானப்படுத்தப்பட்டால் ஆகக்கூடியது 6 மாத சிறைத்தண்டனை அல்லது 5,000 திர்ஹமுக்கு அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

மூன்றாம் நபருக்குத் தெரியாமல் அல்லது எழுத்துமூலமான அவமானப்படுத்தலுக்கு ஐந்தாயிரம் திர்ஹமுக்கு குறைவான அபராதம் விதிக்கப்படும்.

வேறேதாவது வகையில் அல்லது இலத்திரனியல் ஊடகங்களினூடாக அவமானப்படுத்தப்படுவதும் கூட்டாட்சி சட்ட எண் 21 வது பிரிவு. சைபர் குற்றங்களை எதிர்ப்பதில் 2012 இன் 5 (சைபர் சட்டம்) அமைவாக குற்றமாகவே ஐக்கிய அரபு இராச்சியத்தில் கருதப்படுகிறது. அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒருவருடத்திற்கு குறையாக சிறைத்தண்டனையுடன் 250,000 திர்ஹமுக்கு குறையாத 500, 000 திர்ஹமுக்கு அதிகப்படாத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்பதை கவனத்திற்கொள்க.

அது மட்டுமல்ல தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபருடைய அனுமதியின்றி குரல் பதிவு, புகைப்படங்களை சேமித்தல் என்பனவும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான குற்றம் நிரூபிக்கப்படுமாயின் ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது, 250,000 திர்ஹமுக்கு குறையாத 500, 000 திர்ஹமுக்கு அதிகப்படாத தொகை அபராதமாக விதிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435