விமான டிக்கட்டுக்கள் பெற்று தருவதாக பண மோசடி

விடுமுறையில் வீடு செல்வதற்கு குறைந்த கட்டணத்தில் விமான டிக்கட்டுக்களை பெற்றுத் தருவதாக கூறி புலம்பெயர் தொழிலாளர்கள் 21 பேரை மோசடி செய்த நபரை ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுற்றுலாத்துறை நிறுவனம் ஒன்றில் வேலைசெய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜா நகரில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் வருடாந்த விடுமுறையில் நாடு திரும்பும் நோக்கில் குறைந்த கட்டணச் சலுகையில் விமான டிக்கட்டுக்களை பதிவு செய்வதற்கான பணத்தை குறித்த நபரிடம் வழங்கிவிட்டு, உரிய தினத்தில் தமது பொருட்களுடன் விமானநிலையம் சென்ற பின்னரே தமக்கான டிக்கட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிந்துள்ளனர். உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் வழங்கியதையடுத்து அல் தாய்ட் பொலிஸ்நிலையம் சந்தேக நபரின் புகைப்படத்தை வௌியிட்டு பொது மக்களின் உதவியை நாடியது.

முறைப்பாடு செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் விசாரணைகளின் போது உண்மையை கூறியுள்ளார். தனக்கு100.000 திர்ஹம் கடன் இருப்பதாகவும் அதனால் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அந்நபர் கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தமது பயண டிக்கட்டுக்களுக்கான பணத்தை கையளித்தவுடன் தனது இருப்பிடத்தை மாற்றியதாவும் கையடக்க தொலைபேசியின் இயக்கத்தை நிறுத்தி வைத்ததாகவும் அச்சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விமான டிக்கட்டுக்களை சந்தேக நபர் பதிவு செய்ததாகவும் பின்னர் பணம் செலுத்தாமையினால் டிக்கட்டுக்கள் தானாகவே ரத்தாகியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மோசடி நபர்களிடம் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அவதானத்துடன் இருப்பது அவசியம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435