இடைத் தரகர்கள் இன்றி வீட்டுப் பணியாளர்கள் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்வதற்கான உத்தியோக இணையதளமொன்றை அந்நாட்டு அரசு ஆரம்பித்துள்ளது.
அந்நாட்டு தொழில் மற்றும் சமூக தொடர்பாடல் அமைச்சின் musaned.gov.sa என்ற இணையதளத்தில் பிரவேசித்து தகவல்களை அறிந்துகொள்ளலாம். அதில் அனுமதி பெற்ற உத்தியோகபூர்வ முகவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவ்விணையதளத்தில் காணப்படும் வேலைவாய்ப்புக்கள், எவ்வளவு காலம் செல்லும், செலவு போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
வீட்டுப்பணியாளர்களை பணிக்கமர்த்தும் முறையை ஒழுங்குப்படுத்தும் நோக்கிலேயே சவுதி அரசு இச்சேவையை ஆரம்பித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் சேவை வழங்க தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அல்லது மேன் பவர் நிறுவனத்தின் சேவையை நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதனால் புலம்பெயர் தொழில்வாய்ப்பை நாடுவோர் குறித்த இணையதளம் தொடர்பான விபரங்களை அறிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.
சவுதியில் பணி தொடர்பான செயற்பாடுகள் குறித்த இணையளமூடாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்