வௌிநாட்டவர்களை தொழிலுக்கு எடுப்பதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஓமான் அரசு நீடித்துள்ளது.
குறிப்பிட்ட’குடிமக்கள் மட்டுமேயான தொழில் வாய்ப்புக்களுக்கு வௌிநாட்டவர்களை அமர்த்தும் தடையே மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித வள அமைச்சர் ஷீக் அப்துல்லா பின் நஸேர் அல் பகீரி தெரிவித்துள்ளார்.
விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு பிரதிநிதிகள் போன்ற துறைகளுக்கு அந்நாட்டு குடிமக்களே அமர்த்தப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதுடன் வௌிநாட்டவர்களை அமர்த்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்து. அத்தடை கடந்த மே மாதம் 31ம் திகதி தொடக்கம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.