கடந்த வருடம் மட்டும் வீதிக்கடவைகளை பயன்படுத்தாது வீதியை கடந்தமையினால் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களினால் 46 பேர் உயிரிழந்துள்ளர் என்று டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தொழிலாளர்கள் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக செயற்படுவதனால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் இதனால் ஒவ்வொரு வருடமும் மூன்று மாத பிரசார நடவடிக்கையினூடாக வீதிக்கடவையில் வீதியை கடப்பதன் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பாக வீதியில் செல்வது என்பன தொடர்பில் மக்களுக்கு விளிப்புணர்வு வழங்கப்படுகிறது என்றும் வீதிப் போக்குவரத்துக்கான ஜெனரல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
முழுமையான வீதி பாதுகாப்பை ஏற்படுத்தி வீதி விபத்துக்களில் இருப்போரின் எண்ணிக்கையை 2020ம் ஆண்டில் பூச்சியமாக மாற்றுவதே தமது நோக்கம் என்று திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கொல் ஜமால் அல் பனாயி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 64,620 பேருக்கு தண்டப்பணம் விதிகக்கப்பட்டது என்றும் இத்தொகை 2014ம் ஆண்டு 61,391ஆகவும் 2013ம் ஆண்டில் 55,206ஆகவும் இருந்து என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்