குவைத்தில் வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் பணியாற்றும் சுமார் 3 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த வருடம் மட்டும் சுமார் 19 பில்லியன் நிதியை தத்தமது நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இது அந்நாட்டின் வருடாந்த வரவுசெலவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியளவு ஆகும்.
இவ்வாறு செய்யப்படும் அதிக வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தினூடாக நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நோக்கிலேயே இவ்வாறு 5 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டுக்கு 20 மில்லியன் குவைத் டினார் நாட்டு வருமானமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 100 டினாருக்கு குறைவான நிதி பரிமாற்றத்திற்கு 2 வீதமும் 100-499 வரையான நிதிக்கு 4 வீத வரியும் 500க்கு அதிக நிதிப் பரிமாற்றத்திற்கு 5 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
வரியேய்ப்பில் ஈடுபடும் நபர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கவும் அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இந்நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கு மேலதிக பணமும் செலுத்தப்படுவது அவசியமாகும்.
வேலைத்தளம்