பணிப்பெண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை

வீட்டுப்பணிப்பெண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபிய கைத்தொழில் அமைச்சு மற்றும் உள்விவகார அமைச்சு என்பன எச்சரித்துள்ளன.

அவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 15 வருட சிறைத் தண்டனை அல்லது ஒரு மில்லியன் சவுதி ரியால் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அமைச்சுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவ்வாறு கடத்தி வரப்பட்ட பணிப்பெண்களை தெரிந்தே பணிக்கமர்துபவர்கள் மற்றும் தரகர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்படின் தண்டிக்கப்படுவர். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முஸானெட் இணையத்தளத்தினூடாக நடத்தப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சவுதி தொழிலாளர் அமைச்சு, இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நாடுகளுக்கிடையிலான அனைத்து ஆட்சேர்ப்பு ஒப்பந்தங்களும் கண்டிப்பாக கண்காணிக்கப்படும். அனைத்து வௌிநாடுகள் மற்றும் நாட்டிலுள்ள தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள முசானெட் இணையத்தளத்தில் அனைத்து பணியாளர்களும் ம பதியப்படல்வேண்டும். தொடர்ச்சியாக ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் அறிவிப்பின்றி திடீரென சோதனைகள் செய்யப்படும். நாட்டுப் பிரஜைகளும் ஏனையவர்களும் உத்தியோகப்பூர்வமற்ற அலுவலகங்களுடன் தொடர்புகளைப் பேண கூடாது. பொது மக்கள் முஸானெட் இணையத்தளத்தில் பிரவேசித்து இயக்குனர் பதிவு செய்யப்பட்டவரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இது தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டால், musaned.gov.sa இணையதளத்தில் உள்ள 19911 ​இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நாட்டிலுள்ள தொழிலாளர் அமைச்சின் கிளைகளுக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்யலாம் என்றும் அனைத்து முறைப்பாடுகளும் விசாரணை செய்யப்பட்டு துஷ்பிரயோகம் செய்தோர் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435