
சவுதி அரேபியாவில் பணியாற்றும் வௌிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவது 9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியப்படுகிறது.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 11.72பில்லியன் சவுதி ரியால் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்வருடம் 10.72 பில்லியன் ரியால் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதி முகவர் நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் உள்ள சவுதி நாட்டவர்கள் சவுதிக்கு பணம் அனுப்புவது இவ்வாண்டு 2.4 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 4.94 பில்லியன் ரியால்களாவிருந்த பணப்பரிமாற்றம் இவ்வாண்டு 5.00 பில்லியன் ரியால் வரை அதிகரித்துள்ளது என்றும் அந்நிதி முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.