சட்ட விரோத உறவுகளை பேணுவோருக்கு கட்டார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 296வது சரத்திற்கமைய ஒரு வருடம் தொடக்கம் 3 வருடம் வரையான சிறைத் தண்டனை வழங்கப்படும்.
கட்டாரில் திருமணத்திற்கு அப்பாலான அனைத்து உறவுகளும் சட்ட விரோத உறவுகளாக கருதப்படுகின்றமையினால் அதனைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் பேணப்படுகின்றன. இச்சட்டமானது இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத அனைவருக்கும் பொருந்தும்.
அதுமட்டுமன்றி அத்தகைய குற்றங்களுக்கு துணை செல்லும் நபருக்கும் அதே போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. கட்டார் நாட்டின் 2004, 11ஆம் இலக்க சட்டத்திற்கமைய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.
இதனால் கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் பணியாளர்கள் குறித்த சட்டங்கள் தொடர்பில் கவனமாகவும் விளிப்பாகவும் இருப்பது பாதுகாப்பாக இருப்பதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்