றமழான் மாதத்தை முன்னிட்டு குவைத் வீதி போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டனைகள் குறைக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கமைய தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன.
எனினும் இம்மாதத்தில் வழங்கப்பட்டுள்ள இச்சலுகைக் காலம் அந்நாட்டு பிரஜைகளுக்கு மட்டுமே உரித்துடையது. புலம்பெயர் தொழிலாளர்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குவைத் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு வீதி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராதத்தை உள்விவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக அல்லது அந்நாட்டு பொலிஸ் திணைக்களத்தினூடாக செலுத்த முடியும்.
தமது தவறுகளை திருத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள உள்விவகார அமைச்சு, இப்புனித றமழான் மாதத்தில் இம்முயற்சி புதிய ஆரம்பமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனங்களை பொலிஸ் பொறுப்பிலிருந்து மீட்டெடுக்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறும் அபராதப்பணத்தை செலுத்த இவ்வாய்ப்பை பயனப்படுத்திக்கொள்ளுமாறும் அந்நாட்டு பிரஜைகளிடம் அமைச்சு கோரியுள்ளது.
வேலைத்தளம்