மெக்டொனால்ட் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு மெக்டொனால்ட் ஊழியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 4ம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இங்கிலாந்தின் க்ரேபார்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய பிரதேச மெக்டொனால்ட் ஊழியர்களே இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மணித்தியாலத்திற்கு 10 ஸ்ரேலிங் பவுன் சம்பளம் தேவை, பூச்சிய மணித்தியால ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி, மெக்டொனால்ட் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மெக்டொனால்ட்டின் தற்போதைய சேவை ஒப்பந்தம் மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ள ஊழியர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரித்தானியாவில் மட்டும் சுமார் 80,000 பேர் மெக்டொனால்ட்டில் பணியாற்றுகின்றனர். இந்த வேலைநிறுத்தம் பிரித்தானியா முழுவதும் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் ஊழியர்களை ஒன்றிணைக்கவும் சரியான சம்பள அளவை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என்ற காரணத்தினால் பேர்கர் கிங் மற்றும் கேஎப்சி என்பன இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435