தொழிலாளர் உரிமை தொடர்பில் புலம்பெயர் தொழிலாளருக்கு பயிற்சி

மத்திய கிழக்கு பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் உரிமை மற்றும்
தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நெறியில் சுமார் 509 பேர் கலந்துகொண்டனர்.

பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதலை டுபாய் தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தரக் குழவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஓபய்ட் பின் சுரோர் வழங்கினார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், டுபாயில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களின் உரிமை, கடமை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள். இப்பயிற்சியானது இந்நாட்டின் கலாசாரம், பாராம்பரியம் என்பவற்றை உள்வாங்கி பணிபுரிய உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இப்பயிற்சிகள் தொழிலாளர்கள் பணியை முடித்த பின்னர் நடத்தப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கும் புதிய வாழ்க்கைக்கு தம்மை இசைவாக்கப்படுத்திக்கொள்ளவும் சுற்றத்தாருடன் ஒற்றுமையாக இருப்பதற்கும் இப்பயிற்சி பேருதவியாக இருக்கும்.

டுபாய், தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தர குழுவின் நோக்கம் ஆரோக்கியமான, சர்வதேச தரம் மிக்க வேலைச்சூழலை தொழிலாளருக்கு உருவாக்கிக் கொடுப்பதே என்று தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435