வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இஸ்ரேல் விஜயம்

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேல் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள அந்நாட்டிலுள்ள இரு நாடுகளுக்கிடையிலான வெளிநாட்டு தொழில்வாய்ப்பை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

கடந்த வாரம் அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் ஊரி ஏரியெல்லை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இது தொடர்பில் கலந்துரையாடினார்.

மேலும் ஏனைய துறைகளில் காணப்படும் வேலைவாய்ப்பு மற்றும் தற்போது பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது இஸ்ரேலுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பி. செல்வராஜ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லஷ்மன் அபேகுணவர்தன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஆலோசகர் பத்மினி ரத்னாயக்க, இஸ்ரேலுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளர் எம்.ஆர்.சி.பீ ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435