இந்திய வேலைநிறுத்தத்தில் 150 மில். தொழிலாளர் பங்களிப்பு

கடந்த வாரம் இந்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய வேலைநிறுத்ததினால் பலகோடி ரூபா நட்டமேற்பட்டுள்ளதுடன் உலக வரலாற்றில் அதிக தொகையான மக்கள் கலந்து கொண்ட ​வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் சக்தியை நவதாராளவாத பொருளாதார பலமாக ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் மிக முக்கிய துறைகளில் இருந்து சுமார் 150 மில்லியன் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவின் போக்குவரத்து, சுகாதாரம், நிதி, சக்திவளம், அணுவளம், இரும்பு உற்பத்தி, கல்வி, பாதுகாப்பு ஆகிய பிரதான துறைகளைச் சார்ந்த தொழிலாளரகள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தமது கோரிக்கைளை முன்வைத்த தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தினால் அவை நிராகரிக்கப்பட்டதையடுத்து செப்டெம்பர் 2ஆம் திகதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஓகஸ்ட் 30 ஆம் திகதி நிபுணத்துவமற்ற தொழிலாளர்களுடைய நாளாந்த சம்பளமான 3.70 அமெ. டொலரை 5.20 அம.டொலராக உயர்த்த மத்திய அரசு சம்மதித்துள்ளது. இச்சலுகை போதாது என்று நிராகரித்த தொழிற்சங்கவாதிகள் இவ்வேலைநிறுத்தத்தை திட்டமிட்டாற்போல் நடத்தியுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள், அரச துறைகளை தனியார் மயமாக்குகின்றமையை நிறுத்தல், ஓய்வூதிய உத்தரவாதம், சமூக பாதுகாப்பு உத்தரவாதம் உட்பட 12 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435