அனுமதியின்றி வேறு வேலைகளில் மேலதிக தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக குவைத் மாநகரசபை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு இணையதளமான குவைத் அப் டு டேட் செய்தி வௌியிட்டுள்ளது.
குவைத்தில் பணியாற்றும் நிதி மற்றும் நிர்வாகத்துறையில் பணியாற்றும் சுமார் 133 புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதியின்றி வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று அவ்விணையதளம் தெரிவித்துள்ளது.
இத்தொகை மேலும் அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கு ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளர் தொடர்பிலும் தனித்தனியாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் சரியான தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் குவைத் நகரசபை பணிப்பாளர் நாயகத்திடம் கையளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வேறு தொழில்களில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் நடவடிக்கையெடுக்க மாநகரசபை பின் நிற்கப்போவதில்லை என்றும் புலம்பெயர் தொழிலாளரை கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் கமராக்கள் பொருத்த மாநகரசபை தீர்மானித்துள்ளதாகவும் அவ்விணையதளம் தெரிவித்துள்ளது.