வீதி ஒழுங்கு விதிகளை மீறும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர் ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார்.
பாடசாலைகளுக்கருகில் ஒரு வாகனத்தை முந்திக்கொண்டு மற்றொரு வாகனம் செல்ல முற்பட்டால் அல்லது வீதியில் பிரிக்கப்பட்டுள்ள எல்லைகளை கடந்தால் ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று டுபாய் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் புதுப்புது வீதி ஒழுங்கு விதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவ்வாறே இப்புதிய போக்குவரத்து விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் வீதிக்கடவைகளுக்கருகில் செல்லும் போது அவதானத்துடன் வீதி விதிகளை பின்பற்றுமாறு பொலிஸார் மோட்டார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
சாரதிகள் மாத்திரமின்றி பெற்றோரும் பாடசாலை அமைந்துள்ள பகுதிக்குள் உள்நுழையும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சாரதிகள் வீதிக் கடவைகளுக்கு அருகில் மாணவர்களை இறக்கி விட வேண்டும் என்றும் பாடசாலை அமைந்துள்ள வலயத்துக்கு கவனயீனமாக நடந்துக்கொள்ளும் சாரதிகளுக்கு கருப்புப் புள்ளிகள் வழங்கப்படும்.
நீண்ட கோடைக்கால விடுமுறையின் பாடசாலையின் புதிய தவணை ஆரம்பித்துள்ள நிலையில் பொலிஸார் இவ்வறிவித்தலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.