கட்டாரில் உரிமைகளை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7இல் அமைந்துள்ள தொழிலாளர் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்வரும் 2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண காற்பந்தாட்டப்போட்டிக்கான கட்டுமான பணிகளில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 2 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இலங்கையை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் கட்டாரில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 23,000 பேர் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களுடைய தொழில் உரிமையே கட்டாரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதுடன், உரிய சம்பளம் மற்றும் வேலை நேரம் என்பவற்றினால் நிலவும் ஒழுகின்மை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு தொழில் உரிமை அமைப்பையின் உதவியை நாடினாலும் பலன் கிடைப்பதில்லை. இதனால் சர்வதேச தொழிற்சட்டம் தொடர்பில் கட்டாரில் ஏற்பட்டுள்ள நிலை பல்வேறு சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு கட்டாருக்கு எதிராக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிவில் அமைப்புக்கள் சர்வதேச தொழில் தாபனத்திடம் முறையிட்டுள்ளன. இதனை கருத்திற்கொண்டு ஆராய்வதற்கான ஆணைக்குழுவொன்றை எதிர்வரும் நவம்பரில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை கருத்திற்கொண்டு கட்டாரில் பணியாற்றும் இலங்கையரின் உரிமைக்காக அரசாங்கம் செயற்படவேண்டும். அந்நாட்டில் புலம்பெயர் இலங்கையர் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும். சர்வதேச தாபனத்தினால் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு பங்களிப்பு வழங்குவதுடன் சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளும் வரையில் கட்டாருக்கு இலங்கையரை அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435