வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியாக இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் என அவதானத்துடன் இருக்குமாறும் டுபாய் பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.
புதுப்பிக்காமையினால் வாடிக்கையாளரின் வங்கி அட்டையின் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீள செயற்படுத்துவதற்கு மீண்டும் இவ்விலகத்தை தொடர்புகொள்ளுமாறு வரும் குறுந்தகவல்கள் போலியானவையாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏமாற்றப்பட்டமை தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் 811 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளாவியரீதியில், வங்கித்துறையில் இணைய குற்றங்கள் கடந்த வருடத்தில் 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 18 மில்லியன் அமெரிக்க டொலர் (66 மில்லியன் திர்ஹம்) பண மோசடி இடம்பெற்றுள்ளதாக இணைய குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளது.