15 மில். திர்ஹம் வென்ற 22 நண்பர்கள்- டுபாயில் சம்பவம்

டுபாயில் மாதாந்தம் 1,500 திர்ஹம் சம்பளத்திற்கு பணியாற்றிய 22 ஊழியர்கள் இணைந்து கொள்வனவு செய்த அதிர்ஷ்ட லாப டிக்கட்டினூடாக 15 மில்லியன் திர்ஹம் பணப்பரிசு கிடைத்துள்ளது.

ஆளுக்கு 25 ரூபா கணக்கில் சேர்க்கப்பட்ட பணத்தில் குறித்த அதிர்ஷ்ட இலாப சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்ச்சியாக 18 மாதங்கள் குறித்த அதிர்ஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.

ஷ்ரீனு சிறிதரன் நாயர் மற்றும் அவருடைய நண்பர்களுமே இவ்வாறு மில்லியன் கணக்கான பணத்தை பரிசாக பெற்றுள்ளனர்.

இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 25 திர்ஹம் வீதம் சேர்த்து அதிர்ஷ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்வோம். இருவருடைய பணம் மீதமாகும். அதனை அடுத்த முறைக்கு பயன்படுத்துவோம்.

சரியான நேரத்தில் பணம் கிடைத்துள்ளது. பணக் காசோலை அடுத்த மாதம் கிடைக்கும். நாம் அனைவரும் அந்த நாளுக்கு காத்திருக்கிறோம் என்று கூறும் சிறிதரன் டுபாயில் தனியார் கம்பனியொன்றில் கடந்த 6 வருடங்களாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435