மக்கா உட்பட ஏனைய இஸ்லாமிய வணக்கஸ்தலங்களுக்கு விஜயம் செய்ய வௌிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.
உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகாத நாடாக உள்ள சவுதி அரேபியா தொடர்ந்தும் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
வருடம் தோறும் மில்லியன் கணக்கான மக்கள் மக்கா, மதீனா ஆகிய புனித இடங்களை வணங்குவதற்காக சவுதிய அரேபியாவிற்கு செல்கின்றனர். எதிர்வரும் ஜூன் மாதம் ஹஐ் யாத்திரிரை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கோவிட் 19 தாக்கத்தை தவிர்ப்பதற்காக இத்தற்காலிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஹஐ் யாத்திரைக்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வௌியிடப்படவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.