அமைச்சர் மனோ கணேசன்
அரசு தீர்மானித்துள்ள 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு சென்றடையும் வரையில் எவ்வித பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ள தாம் தயாரில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசு நிதி ஒதுக்கியுள்ள போதிலும் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வை அடையும் வரையில் தமிழ் முற்போக்கு முன்னணி எந்த பேச்சுவார்தையிலும் கலந்துகொள்ளாது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள பல்முறை சம்பள முறைமை யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்விடயம் தொடர்பில ஆராய்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் எந்த யோசனையை பரிசீலிக்க முடியும். ஆனால், அரசு அங்கீகரித்த 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளருக்கு கிடைக்கும் வரையில் எது தொடர்பிலும் கலந்துரையாட முடியாது என்று உறுதியாக தெரிவித்தார்.
வேலைத்தளம்